/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காணாமல் போன வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை
/
காணாமல் போன வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை
ADDED : அக் 03, 2025 07:35 AM
வானுார்; கிளியனுார் அருகே காணாமல் போன நபர், துாக்குப்போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில், ஓமந்துார் லே பையில் நேற்று முன்தினம் ஹோண்டா ைஷன் பைக் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருப்பதாக கிளியனுார் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நேரில் சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் துாக்கிட்டு இறந்திருப்பது தெரியவந்தது.விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம், அய்யம்பாளையம் புதுார் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் பிரபாகரன், 25; எனவும், பி.சி.ஏ., பட்டதாரியான அவர், கடந்த இரண்டரை ஆண்டுகளாக வீட்டில் கோபித்துக்கொண்டு குடும்பத்தினருடன் வசிக்காமல் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த விபரம் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து பிரபாகரன் இறந்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.