UPDATED : ஆக 29, 2026 09:25 PM
ADDED : ஆக 29, 2026 09:12 PM
கோட்டக்குப்பம்: கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம், பெரிய தெரு கடற்கரை அருகே, தனிநபர் ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கடந்த சில தினங்களக்கு முன்பு, கோட்டக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் போலீசார் அப்பகுதியில் சென்று சோதனை நடத்தினர். அப்போது இளைஞர்களுக்கு, கஞ்சா சப்ளை செய்ய வைத்திருந்த, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்த, 3.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கோட்டக்குப்பம் ஜிமியத் நகரை சேர்ந்த முகமது ஆசிப், 21; ரஹ்மத் நகர் மிலாத் தெருவை சேர்ந்த இர்பான், 19; ஆகிய இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கோட்டக்குப்பம் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
