/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : அக் 05, 2024 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி, வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ரேஷன் கடையில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, பொதுமக்களுக்கு வினியோகிக்கும் பொருட்கள் விபரம், இருப்பு பதிவேடு குறித்தும் கேட்டறிந்தார். மேலும், பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பொதுமக்கள் குறை கூறாத அளவிற்கு விற்பனை செய்யுமாறு விற்பனையாளரிடம் அறிவுறுத்தினார்.
பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம், செயல் அலுவலர் ேஷக் லத்தீப் உட்பட பலர் உடனிருந்தனர்.