/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய வழித்தடத்தில் பஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
புதிய வழித்தடத்தில் பஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
புதிய வழித்தடத்தில் பஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
புதிய வழித்தடத்தில் பஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 02, 2025 11:08 PM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க துவக்க விழா நடந்தது.
எரளூர் கிராமத்தில் விழுப்புரத்திலிருந்து எரளூர், தி.மழவராயனூர் கிராம வழியாக மனக்குப்பம் செல்லக்கூடிய புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், சேர்மன் ஓம்சிவ சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், சுபாஷ் முன்னிலை வகித்தனர். எரளூர் கிளைச் செயலாளர்கள் முருகன், சக்கரபாணி வரவேற்றனர்.
சிறப்பு விருந்தினர் பொன்முடி எம்.எல்.ஏ., புதிய வழித்தடத்தில் பஸ்சை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி.
அவைத் தலைவர் மோகன், இளைஞரணி அமைப்பாளர் நிர்மல்ராஜ், நிர்வாகி ஏழுமலை, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் கிருஷ்ணராஜ், விவசாய அணி அமைப்பாளர் வெங்கடேசன், தி.மழவராயனுார் ஊராட்சி தலைவர் லதா, கிளைக் கழக செயலாளர் ஜெயராமன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.