/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து வழங்கல்
/
விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து வழங்கல்
ADDED : ஆக 02, 2025 07:48 AM

வானுார் : திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் உளுந்து விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
அவர் கூறுகையில், 'உளுந்து சாகுபடி செய்ய ஏக்கருக்கு, 2 கிலோ விதை போதுமானது. ஒரு கிலோ உளுந்துக்கு, 60 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. வரப்பு பயிராக நெல்லில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் பூச்சி தாக்குதல் குறைக்கப்பட்டு விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்' என்றார்.
இ தில் வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ், வேளாண்மை அலுவலர் ரேவதி, உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் பஞ்சநாதன், சுரேஷ் விஜயலட்சுமி மற்றும் ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி, சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

