/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் நிலையத்தில் மழைநீர் எம்.எல்.ஏ., ஆய்வு
/
பஸ் நிலையத்தில் மழைநீர் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : அக் 24, 2025 03:21 AM

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
விழுப்புரத்தில் தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் காலை, புதிய பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, லட்சுமணன் எம்.எல்.ஏ., அதிகாரிகள் குழுவினருடன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகள், மழை நீர் வெளியேற்றும் பம்ப் அவுஸ், பஸ் நிலையம் அருகே வடிகால் வாய்க்கால் நிலையை பார்வையிட்டு, உடனடியாக மழைநீர் வெளியேற்ற ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், 'இங்கு மழை காலங்களில் தேங்கும் மழைநீர், வாய்க்கால்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,' என்றார்.
அப்போது முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் வசந்தி, நகராட்சி பொறியாளர் புவனேஷ்வரி, நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தன்ராஜ், தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் சக்கரை, வெற்றிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

