/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தரமற்ற குடிநீர் வினியோகம் எம்.எல்.ஏ., ஆய்வு
/
தரமற்ற குடிநீர் வினியோகம் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஆக 14, 2025 01:12 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தரமற்ற குடிநீர் வினியோகம் குறித்து ஆய்வு நடந்தது.
செ.குன்னத்துார் காலனி பகுதியில் பொதுமக்களுக்கு வினியோகிக்கும் தரமற்ற குடிநீரால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு வருவதாக, அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார், டாக்டர் சூர்யா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மஞ்சுளா ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதிக்கு சென்றனர்.
அப்பகுதியில் உள்ள தண்ணீரை குடிநீர் வாரிய அதிகாரிகள் மூலம் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பதாக எம்.எல்.ஏ., உறுதி அளித்தார்.
மேலும் அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்கு சுகாதார குடிநீர் வழங்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, சுகாதார துறை மூலம் மருத்துவ முகாம் நடத்தி அனைத்து மக்களுக்கும் சிகிச்சை அளிக்க வலியுறுத்தப்பட்டன.