ADDED : ஜூன் 06, 2026 09:10 AM

திண்டிவனம்: புனரமைக்கப்பட்ட திண்டிவனம் சட்டசபை தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
திண்டிவனம் திரவுபதி அம்மன் கோவில் எதிரில் கடந்த 2001ம் ஆண்டு தமிழக அரசால், கட்டப்பட்ட எம்.எல்.ஏ., அலுவலகம், செயல்படாமல் பூட்டிக் கிடந்தது. தற்போது அலுவலகம் புனரமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.
விழாவிற்கு, வி.சி., தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
தொகுதியின் எம்.எல்.ஏ., சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், துரை ரவிக்குமார் எம்.பி., சப் கலெக்டர் ஆகாஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணன், மாவட்ட துணை சேர்மன் ஷீலாதேவி சேரன், நகராட்சி கமிஷனர் பானுமதி.
தாசில்தார் ஏழுமலை, வி.சி., பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன், மண்டல செயலாளர் திலீபன், கருத்தியல் பிரிவு மாநில செயலாளர் சேரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னாதாக அமைச்சராக பொறுப்பேற்ற பின் மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் வன்னி அரசு மற்றும் திருமாவளவனுக்கு வி.சி., கட்சி சார்பில் ஓங்கூர் டோல்கேட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
