மரக்கன்று நடும் நிகழ்ச்சி : கூடுதல் ஆட்சியர் பங்கேற்பு
மரக்கன்று நடும் நிகழ்ச்சி : கூடுதல் ஆட்சியர் பங்கேற்பு
ADDED : ஜூன் 06, 2026 09:10 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏமப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, வனச்சரக அலுவலர் சந்தோஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், பி.டி.ஓ., பாலசுப்ரமணியன், வனவர்கள் பிரபாகரன், அனிதா, வனக்காப்பாளர்கள் கிருபாகரன், கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் அருளரசன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆனந்த்குமார்சிங் பல்வேறு வகையான மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டு அதன் சிறப்புகளை எடுத்துரைத்தார். ஊராட்சி தலைவர் தேவி செந்தில், துணை பி.டி.ஓ., பிரபாகரன் மற்றும் பள்ளி மாணவிகள் உட்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
செஞ்சி வல்லம் அரசு துவக்க பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், வல்லம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் ஊராட்சி நிர்வாக உறுப்பினர்கள் மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து, விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது., மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. ஊராட்சித் தலைவர் சகுந்தலா, மண்வாசம் அறக்கட்டளை நிறுவனர் தியாகு, தலைமை ஆசிரியர் ஜீவகன், இயற்கை விவசாயி அண்ணாமலை பங்கேற்றனர்.
