ADDED : மே 29, 2026 03:53 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் எம்.எல்.ஏ., அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் அருகே விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளது. 2026 சட்டசபை தேர்தல் முடிந்து, மீண்டும் லட்சுமணன் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், விழுப்புரம் எம்.எல்.ஏ., அலுவலகம் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கட்டடத்தில் சில இடங்களில் சேதமடைந்துள்ளதால், பொதுப்பணித்துறை சார்பில் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.
மேல்தள பகுதி உடைக்கப்பட்டு, டைல்ஸ் போடப்படுகிறது. இதேபோல், சுற்றுச்சுவர்களின் சிமென்ட் பூச்சுகள் உடைக்கப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது.
