/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விபத்தில் காயமடைந்தோருக்கு எம்.எல்.ஏ., நேரில் ஆறுதல்
/
விபத்தில் காயமடைந்தோருக்கு எம்.எல்.ஏ., நேரில் ஆறுதல்
விபத்தில் காயமடைந்தோருக்கு எம்.எல்.ஏ., நேரில் ஆறுதல்
விபத்தில் காயமடைந்தோருக்கு எம்.எல்.ஏ., நேரில் ஆறுதல்
ADDED : ஏப் 15, 2025 04:43 AM

விக்கிரவாண்டி:' சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தைச் சேர்ந்த 19 பேர் டிராக்டர் மூலம் மயிலம் கோவிலுக்கு சென்று நேற்று முன்தினம் காலை திரும்பினர்.
மயிலம் அருகே டிராக்டர் மீது லாரிமோதிய விபத்தில், ஒருவர் உயிரி ழந்தார். 18 பேர் காயமடைந்து விக்கிவாரண்டி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மருத்துவமனை உதவி மருத்துவ உள்ளிருப்பு அதிகாரியிடம் வெங்கடேசனிடம் முறையான சிகிச்சை அளிக்க கூறினார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, ஒன்றிய செயலா ளர்கள் ரவிதுரை, ஜெயபால், முருகன், மாவட்ட கவுன்சிலர் முருகன், மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம், ஒன்றிய கவுன்சிலர்கள் சாவித்திரி பாலு, செல்வம், ஊராட்சி மன்ற தலைவி சாவித்திரி கவியரசன், மாவட்ட பிரதிநிதி அசோக், செயலாளர்கள் சிவா, சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.