/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர்களுக்கு லேப்டாப் எம்.எல்.ஏ., வழங்கல்
/
மாணவர்களுக்கு லேப்டாப் எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : பிப் 07, 2026 04:33 AM

செஞ்சி: செஞ்சியில் கல்லுாரி மாணவர்கள் 698 பேருக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., கஸ்தூரிபா நர்சிங் கல்லுாரி, ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லுாரி, செஞ்சி ஐ.டி.ஐ., உட்பட 12 கல்லுாரிகளைச் சேர்ந்த 698 மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி பேசினார்.
ஏ.பி.டி.ஓ., சுந்தரபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத், ஊராட்சி தலைவர் செல்வம், நிர்வாகிகள் அய்யாதுரை, சிவப்பிரகாசம், பிரசன்னா, பாஷா, ராமு மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

