/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெஞ்சுவலியால் பாதித்த பெண்ணை மீட்ட எம்.எல்.ஏ.,
/
நெஞ்சுவலியால் பாதித்த பெண்ணை மீட்ட எம்.எல்.ஏ.,
ADDED : டிச 03, 2024 06:55 AM
விழுப்புரம்: கோலியனுார் கூட்ரோடு அருகே மழை பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த லட்சுமணன் எம்.எல்.ஏ., நெஞ்சுவலியால் தவித்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விழுப்புரம் அருகே கோலியனுார் பகுதிகளில் கனமழையால் பாதித்த பகுதிகளை லட்சுமணன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார். அங்கு, திடீரென நெஞ்சுவலியால் பாதித்த பெண் ஒருவருக்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., முதலுதவி சிகிச்சை அளித்து, மீட்பு குழுவினர் மூலம் போட் ஒன்றை வரவழைத்தார்.
பின், அந்த போட்டில் பெண்ணை ஏற்றி கொண்டு, வெளியே கொண்டு வந்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அந்த பெண்ணிற்கு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ., நெஞ்சுவலியால் பாதித்த பெண்ணை காப்பாற்றிய செயலை, அங்குள்ள பொதுமக்கள் பாராட்டினர்.