/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நுாலகம் கட்டும் பணி எம்.எல்.ஏ., ஆய்வு
/
நுாலகம் கட்டும் பணி எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : அக் 11, 2024 06:42 AM

செஞ்சி: அனந்தபுரம் பேரூராட்சியில் நடந்து வரும் நுாலகம் கட்டும் பணியை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
அனந்தபுரம் பேரூராட்சியில் நுாலக வளர்ச்சி திட்டத்தில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் நுாலக கட்டடம், அயோத்திதாசர் திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் காத்திருப்போர் கூடம் கட்டும் பணியும் நடக்கிறது.
இப்பணிகளை மஸ்தான் எம்.எல்.ஏ., ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க ஒப்பந்ததாரர்களைக் கேட்டு கொண்டார்.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார், அனந்தபுரம் பேரூராட்சி தலைவர் முருகன், துணைச் சேர்மன் அமுதா, தி.மு.க., நகர செயலாளர் சம்பத், அவைத் தலைவர் கல்யாண்குமார், பொருளாளர் பாபு ஐயர், ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரவி, பேரூராட்சி கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.