/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எம்.எல்.ஏ., எல்லாருக்கும் வேண்டியவர் அவரை தமிழ்நாட்டிற்கே நல்லா தெரியும்

ADDED : ஜன 21, 2025 06:47 AM
விழுப்புரம் அரசு மருத்துவமனையில், சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊடகவியலாளர்கள் சங்கம் சார்பில் நடந்த முகாமை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்து பேசுகையில், 'பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
காரணம், பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் வெயில், மழை பற்றி பொருட்படுத்தாமல், பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கின்றனர். எந்த நேரத்தில் எங்கு செல்ல வேண்டும் என முன் கூட்டியே திட்டமிட்டு ஓய்வு எடுக்க முடியாது. முகாமை பத்திரிகையாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த முகாம் நடைபெற உறுதுணையாக இருந்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, பத்திரிகையாளர்களுக்கு நன்கு அறிமுகம் உள்ளவர். அதேபோல், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மிகவும் வேண்டியவர்.
அவரை பற்றி தமிழ்நாட்டிற்கே நன்கு தெரியும். அந்தளவு மிக திறமையாக செயல்படக் கூடியவர் என பாராட்டு தெரிவித்தார்.
அமைச்சரின் பேச்சை கேட்ட எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் இது புகழ்ச் சியா அல்லது வஞ்சப்புகழ்ச்சியா என தெரியாமல் குழம்பினர்.