/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட சிறையில் மொபைல் போன் புதைத்து வைப்பு
/
மாவட்ட சிறையில் மொபைல் போன் புதைத்து வைப்பு
ADDED : மார் 07, 2026 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சிறையில் மொபைல் போன் புதைத்து வைத்திருந்து குறித்து போலீசார் விசாரிக்கின்ற னர்.
விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு மாவட்ட சிறை தொகுதி எண் 3ல் உதவி சிறை அலுவலர் பாலாஜி, 31; சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அங்கு அரை அடி ஆழத்தில் மொபைல் போன் ஒன்று சிம்கார்டு இல்லாமல் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
புகாரின்பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

