/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவியை சேர்த்து வைக்கக்கோரி டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் திண்டிவனம் அருகே பரபரப்பு
/
மனைவியை சேர்த்து வைக்கக்கோரி டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் திண்டிவனம் அருகே பரபரப்பு
மனைவியை சேர்த்து வைக்கக்கோரி டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் திண்டிவனம் அருகே பரபரப்பு
மனைவியை சேர்த்து வைக்கக்கோரி டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் திண்டிவனம் அருகே பரபரப்பு
ADDED : மார் 07, 2026 06:28 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே மனைவியை சேர்த்து வைக்கக்கோரி, மொபைல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், அய்யந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமார் மகன் புவனேஷ், 23; பி.எஸ்சி.,பட்டதாரி. இவர், கல்லுாரியில் படித்த போது உடன் படித்த ஆரணியைச் சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். இதனையறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் அந்த பெண், வீட்டை விட்டு வெளியேறி புவனேைஷ இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் அய்யந்தோப்பில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். சில நாட்களிலேயே இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்த பெண் கோபித்துக் கொண்டு தாய் வீடான ஆரணிக்கு சென்று விட்டார். இதில், மனமுடைந்த புவனேஷ் நேற்று மாலை 3:30 மணியளவில், திண்டிவனம் - வந்தவாசி ரோட்டில் பட்டணம் சந்திப்பில், 100 அடி உயரமுள்ள மொபைல்போன் டவரில் ஏறி, மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
கலெக்டர் நேரில் வந்து பிரச்னையை தீர்க்க வேண்டும். இல்லையேல் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரோஷணை இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி மற்றும் தீயணைப்புத் துறையினர் மொபைல் போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியும் கீழே இறங்கவில்லை.
இதற்கிடையே புவனேஷ் பயன்படுத்திய மொபைல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது. இதனால் தனக்கு வேறு ஒரு மொபைல்போன் தருமாறு மேலிருந்து கத்தினார்.
இதையடுத்து போலீசார், மொபைல் போனில் அந்த பெண்ணுடன் பேசியதாவும், தொடர்பில் இருப்பதாகவும் கூறி னர். அதனை நம்பிய புவனேஷ் மாலை 6:35 மணியளவில் டவரி லிருந்து கீழே இறங்கினார் .
உடன், போலீசார் அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. புவனேஷ் டவர் மேலே ஏறுவதற்கு முன், 108 ஆம்புலன்ஸ், ரோஷணை காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த பிறகு, டவர் மேலே ஏறியுள்ளார் என்பது பிறகுதான் தெரிந்தது.

