ADDED : நவ 07, 2025 11:17 PM

வானுார்: வானுார் அருகே பெட்டிக்கடையில் மொபைல் போனை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
வானுார், காந்தி வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி சரஸ்வதி, 63; இவர் தனது வீட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 9ம் தேதி, கடையில் வைத்திருந்த சரஸ்வதியின் மொபைல் போன் திருடு போனது.
இது குறித்து அவர் வானுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், திருடிய மொபைல் போனை காட்ராம்பாக்கம் பகுதியில் உள்ள நபர் பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சந்தேகத்தின் பேரில், வானுார் அடுத்த காட்ராம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பன் மகன் செல்லக்குட்டி (எ) வாஞ்சிநாதன், 23; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் மொபைல் போனை திருடி பயன்படுத்தியது தெரியவந்தது. உடன் அவரை போலீசார் கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

