/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தோல்வி பயத்தில் மோடி பொன்முடி விமர்சனம்
/
தோல்வி பயத்தில் மோடி பொன்முடி விமர்சனம்
ADDED : மார் 12, 2024 06:19 AM
விழுப்புரத்தில் தி.மு.க., சார்பில் நடந்த முதல்வர் பிறந்த நாள் மற்றும் பட்ஜெட் விளக்க பொது கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'சென்னைக்கு திடீரென வந்துள்ள பிரதமர் மோடி, அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் எனக்கூறியுள்ளார். அதனை நீண்ட காலத்துக்கு முன்பே கருணாநிதி செயல்படுத்தியுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பே இலவச 'டிவி' கொடுத்துள்ளோம். மகளிருக்கு உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்குகிறோம். இந்த திட்டத்தை டில்லியில் கெஜ்ரிவால் காப்பியடித்து இன்று அறிவித்துள்ளார். நமது முதல்வர் தீட்டும் திட்டங்கள் இந்திய அளவில் முன்னோடியாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டபோது வராத பிரதமர் மோடி, இப்போது தேர்தலுக்காக வந்திருக்கிறார். லோக்சபாவிற்கு கூட போகாதவர், தேர்தல் வர இருப்பதால் தோல்வி பயத்தில் சென்னைக்கு வந்திருக்கிறார்' என்றார்.

