/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
ADDED : மார் 16, 2025 07:24 AM
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டியில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் 5 சவரன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, பாரதி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி சாரதா, 42; இவரது கணவர் சென்னையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம், வீடூரில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சாராதா சென்றிருந்தார். நேற்று மாலை 5:00 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து சாரதா அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.