/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பருவ மழை முன்னேற்பாடு செஞ்சியில் கலெக்டர் ஆய்வு
/
பருவ மழை முன்னேற்பாடு செஞ்சியில் கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 23, 2024 04:54 AM

அவலுார்பேட்டை : செஞ்சியில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் பழனி ஆய்வு மேற்கொண்டார்.
செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழையினால் பாதிப்புகளை தடுக்கும் விதமாக மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவற்றை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார். செஞ்சி தாசில்தார் ஏழுமலை, பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செஞ்சியில் சக்கராபரணி ஆற்றுக்கு செல்லும் வாய்க்கால் துார்வாரப்பட்டுள்ளதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஜம்போதி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், கலர்பாளையம் கிராமத்தில் ஜன்மன் திட்டத்தில் பயனாளிகள் வீடு கட்டுவதையும், சிறுநாம்பூண்டியில் நுாறு நாள் வேலை திட்டத்தில் குளம் அமைக்கும் பணி மற்றும் கோணை கிராமத்தில் துவக்கப்பள்ளியில் மதிய உணவின் தரத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.