/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பருவ மழை முன்னெச்சரிக்கை; சப் கலெக்டர் ஆலோசனை
/
பருவ மழை முன்னெச்சரிக்கை; சப் கலெக்டர் ஆலோசனை
ADDED : அக் 13, 2025 12:33 AM

திண்டிவனம்; திண்டிவனத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்த அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் ஜக்காம்பேட்டையில் உள்ள சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சப் கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வருவாய்த்துறை, நகராட்சி, வனத்துறை, மின்துறை, தீயணைப்பு துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில், பொதுமக்களை தங்க வைப்பதற்காக நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும்; அந்த முகாம்களில், அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை பேரிடர் காலங்களில் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்;
ஆறு, ஏரி, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கரைகளின் உறுதி தன்மையினை ஆய்வு செய்து, பலவீனமாக உள்ள கரைகளை பலப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத் தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும்; என அறிவுறுத்தப்பட்டது. இதில், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.