ADDED : அக் 13, 2025 12:33 AM

விழுப்புரம்; விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காணை ஊராட்சியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது.
காணை வி.இ.டி., கல்லுாரி வளாகத்தில் நடந்த மருத்துவ முகாமை, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் ராஜா, ஆர்.முருகன், முருகன், மாவட்ட மருத்துவ அலுவலர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் வாசுகி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றியக்குழு துணை தலைவர் வீரராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவநேசன், நிர்வாகிகள் பழனி, சிவக்குமார், நாராயணசாமி, மதன், கருணாகரன், புனிதா அய்யனார், சிவராமன், ஊராட்சி தலைவர் கமலநாதன் உட்பட அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.