/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் தொகுதியில் போட்டியிட 50க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு
/
விழுப்புரம் தொகுதியில் போட்டியிட 50க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு
விழுப்புரம் தொகுதியில் போட்டியிட 50க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு
விழுப்புரம் தொகுதியில் போட்டியிட 50க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு
ADDED : டிச 30, 2025 04:11 AM
விழுப்புரம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட 50க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், சட்டசபை தேர்தலில் போட்டியிட ஏராளமான நிர்வாகிகள், விருப்ப மனு அளித்து வருகின்றனர். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, முருகன்.
மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்க சேகர், முன்னாள் மாவட்ட அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா, மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி.
தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெகதீஸ்வரி, ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., சங்கர், கவுன்சிலர்கள் வழக்கறிஞர் ராதிகா, கவுன்சிலர் கோல்டு சேகர், சிறுபான்மை பிரிவு ஜாகிர் உள்ளிட்ட ஏராளமானோர் விருப்ப மனு அளித்துள்ளனர். விழுப்புரம் தொகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளதாகவும், தங்களுக்கு சீட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. கட்சியில் எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்ததே மகிழ்ச்சிதான்.
மேலும், அ.தி.மு.க.,வில் கட்சியைச் சேர்ந்த எவரும் விண்ணப்பம் அளிக்கலாம். இதற்கு யாருடைய பரிந்துரையும் தேவையில்லை என்கிற நிலை உள்ளது என விருப்ப மனு அளித்த கட்சியினர் பெருமிதமாக தெரிவித்தனர்.

