ADDED : டிச 12, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
வளவனுார் அருகே தொந்திரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் ஜனனி,19; இவர், விழுப்புரம் எம்.ஜி.ஆர்., மகளிர் கல்லுாரியில் பி.ஏ., வரலாறு மூன்றாம் ஆண்டு பயில்கிறார். இவர், நேற்று முன்தினம் கல்லுாரி சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. பெண்ணின் தாய் சவிதா அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.