ADDED : ஜன 07, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்,: மகளைக் காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி. புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் இவரது 17; வயது மகள். திருக்கோவிலூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி காலை 9:00மணி அளவில் வழக்கம்போல் காலை வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.