/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
7 மாத பெண் குழந்தையின் தாய் துாக்கிட்டு தற்கொலை
/
7 மாத பெண் குழந்தையின் தாய் துாக்கிட்டு தற்கொலை
ADDED : டிச 27, 2024 06:52 AM
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே காதல் கணவர் பேசாதாதல் 7 மாத பெண் குழந்தையின் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்டமங்கலம் அடுத்த பெரியபாபுசமுத்திரம் ஆலஞ்சாலை வீதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் 25; இவர் புதுச்சேரி செல்லிப்பட்டில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். இவர் விக்கிவாண்டி அருகே உள்ள எடையப்பட்டியை சேர்ந்த கனிமொழி 22; என்பவரை காதலித்து, கடந்த 2023 மார்ச் 27ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு சச்சிகா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது.
தலை பிரசவத்திற்காக தாய் வீட்டிற்குச் சென்ற கனிமொழிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், மனைவி மற்றும் குழந்தையை வீட்டிற்கு அழைத்துவர கணவர் ஜெயபிரகாஷ் செல்லவில்லை. அவரது பெற்றோர் சென்று அழைத்துவந்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த பின்னரும் கணவர் தன்னிடம் சரிவர பேசாமல் இருந்துவந்ததால், மனமுடைந்த கனிமொழி நேற்று முன்தினம் காலை வீட்டில் துாக்குப்போட்டுக்கொண்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குசிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து பிரேதத்தை கைப்பற்றி
விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளில் கனிமொழி தற்கொலை செய்துகொண்டதால், விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.