/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டூ வீலர் பார்க்கிங்கில் பெட்ரோல் திருட்டு நடுரோட்டில் தவிக்கும் வாகன ஓட்டிகள்
/
டூ வீலர் பார்க்கிங்கில் பெட்ரோல் திருட்டு நடுரோட்டில் தவிக்கும் வாகன ஓட்டிகள்
டூ வீலர் பார்க்கிங்கில் பெட்ரோல் திருட்டு நடுரோட்டில் தவிக்கும் வாகன ஓட்டிகள்
டூ வீலர் பார்க்கிங்கில் பெட்ரோல் திருட்டு நடுரோட்டில் தவிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 25, 2025 04:51 AM

வி ழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், டவுன் பஸ்கள் நிற்கும் பகுதியி ல், மிகப்பெரிய வாகன நிறுத்தும் மையம் இயங்கி வருகிறது. நகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு, தனியாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வெளியூர் செல்வோர் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், பஸ் நிலைய பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு செல்வதால், இரண்டு அடுக்கு பார்க்கிங் கட்டடங்கள் கட்டப்பட்டு, வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தில், சைக்கிள் நிறுத்த ரூ.5ம், பைக்குகளுக்கு ரூ.10ம் கட்டணமாக வசூலிக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், பராமரிப்பின்றி உள்ளதால், பாதி வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் திறந்த வெளியில் நிற்கிறது.
அரசு தரப்பு பார்க்கிங் என்பதால், பல்வேறு தரப்பி னர் நம்பிக்கையோடு வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். ஆனால், பெரும்பாலான வாகனங்களில் பெட்ரோல் திருட்டு தொடர்ந்து நடப்பதாக வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
வழக்கமாக இரவு நேரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களில் தான் பெட்ரோல் திருட்டு நடக்கும். ஆனால், தற்போது பகல் நேரங்களில் விட்டுச்செல்லும் வாகனங்களிலும் பெட்ரோல் திருட்டு நடக்கிறது. வெளியூரில் இருந்து இரவு விழுப்புரம் திரும்பும் உள்ளூர் மக்கள், வாகனத்தை எடுத்துச்செல்லும்போது, நடு வழியில் பெட்ரோல் இன்றி வாகனம் நிற்பதால், நடுரோட்டில் குடும்பத்தோடு தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
வாகனங்களின் கண்ணாடிகள், இண்டிகேட்டர்கள் உடைந்தும், சீட்கள் கிழிக்கப்படுகிறது. வாகன நிறுத்தத்திற்கு கராராக கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தக்காரர்கள், வாகனங்களை சரியாக பராமரிப்பதில்லை. அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் ஆதரவோடு, பெட்ரோல் திருட்டு நடக்கிறது.
சிலர் திருட்டு வாகனங்களை நிறுத்திவிட்டு, ஓரிரு நாட்களுக்கு பிறகு எடுத்துச்செல்வதாகவும், வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

