sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 ராவுத்தன்குப்பம் கிராமத்திற்கு செல்லும் சாலை லாயக்கற்றதாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

/

 ராவுத்தன்குப்பம் கிராமத்திற்கு செல்லும் சாலை லாயக்கற்றதாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

 ராவுத்தன்குப்பம் கிராமத்திற்கு செல்லும் சாலை லாயக்கற்றதாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

 ராவுத்தன்குப்பம் கிராமத்திற்கு செல்லும் சாலை லாயக்கற்றதாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜன 16, 2026 06:45 AM

Google News

ADDED : ஜன 16, 2026 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: ராவுத்தன்குப்பம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை படுமோசமாக மாறி விட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட ராவுத்தன்குப்பம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு திண்டிவனம் மெயின் ரோடு வழியாக சென்று வருகின்றனர். பொது மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலை பொது மக்களின் நலன்கருதி கடந்த ஆட்சியின் போது, தார்சாலையாக போடப்பட்டது.

ஐந்தாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் சாலையில் கருங்கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறி விட்டது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். குறிப்பாக மழை காலங்களிலும், இரவு நேரங்களிலும் அந்த வழியாக செல்வதற்கு வாகன ஓட்டிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

இது குறித்து ராவுத்தன்குப்பம் கிராம வாசியும், அ.தி.மு.க., பாசறை மாவட்ட துணை செயலாளர் வினோத்குமார் கூறுகையில், ''இந்த சாலையை கிராம மக்கள் மட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றுவோரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் சாலை கந்தலாக மாறி விட்டதோடு, மெகா சைஸ் பள்ளங்களும் உருவெடுத்துள்ளன.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது மக்கள் தரப்பில் புகார் அளித்தும் இதுவரை புதிய தார் சாலை போடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை புதுப்பிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.






      Dinamalar
      Follow us