/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுவந்தாடு - மடுகரை சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
சிறுவந்தாடு - மடுகரை சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
சிறுவந்தாடு - மடுகரை சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
சிறுவந்தாடு - மடுகரை சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : நவ 10, 2025 03:56 AM

விழுப்புரம்: சிறுவந்தாடு - மடுகரை நெடுஞ்சாலையில், ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
வளவனுார் அடுத்த சிறுவந்தாடு பகுதியிலிருந்து, மடுகரை வழியாக புதுச்சேரி பகுதிக்குச் செல்லும் நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.
இந்த சாலையை வளவனுார், சிறுவந்தாடு, கொங்கம்பட்டு, ராம்பாக்கம், சொரப்பூர், சொர்ணாவூர், மடுகரை, ஏம்பலம் உள்ளிட்ட பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
விழுப்புரம் - புதுச்சேரி (மடுகரை வழி) பிரதான இந்த நெடுஞ்சாலை பகுதியில், கொங்கம்பட்டு, மடுகரை பகுதியில் தார்சாலை சேதமடைந்து, ஒரு கி.மீ., தொலைவிற்கு ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மழைக் காலங்களில் சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். அதிக வாகன போக்கு வரத்துள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

