/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடியிருப்புகளில் தேங்கிய கழிவுநீர்; அகற்றியது நகராட்சி நிர்வாகம்
/
குடியிருப்புகளில் தேங்கிய கழிவுநீர்; அகற்றியது நகராட்சி நிர்வாகம்
குடியிருப்புகளில் தேங்கிய கழிவுநீர்; அகற்றியது நகராட்சி நிர்வாகம்
குடியிருப்புகளில் தேங்கிய கழிவுநீர்; அகற்றியது நகராட்சி நிர்வாகம்
ADDED : நவ 10, 2025 03:57 AM

விழுப்புரம்: விழுப்புரம் அபேஷாதக்கா வீதியில் தேங்கிய கழிவுநீரை 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் நகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அபேஷாதக்கா வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாயிலம், பாதாள சாக்கடையிலும் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் முழுவதும், அங்குள்ள குடியிருப்பு வீடுகள் முன் குளம் போல் தேங்கியது. மேலும் அப்பகுதியில் குப்பை மூட்டைகளை குவியலாக வைத்திருந்தனர்.
இதனால், அப்பகுதியில் நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இப்பகுதி மக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர். பல நாட்களாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நகராட்சி பொறியாளர்கள், அலுவலர்கள் தலைமையில் ஊழியர்கள் அபேஷாதக்கா வீதியில் இருந்த கழிவுநீர் கல்வாய் அடைப்பு மற்றும் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கியதோடு, குப்பை மூட்டைகளையும் அப்புறப்படுத்தினர்.