/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிடப்பில் சாலை பணி வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
கிடப்பில் சாலை பணி வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : டிச 09, 2025 06:05 AM

விழுப்புரம்: விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் புதிதாக சாலை போடுவதற்கு சாலை பெயர்த்து எடுக்கப்பட்ட நிலையில் சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டி கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களும், புதுச்சேரி, கடலுார் நோக்கி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், பானாம்பட்டு பாதை அருகிலிருந்து தேவநாத சுவாமி நகர் வரை நெடுஞ்சாலைத் துறை மூலம் புதிய தார் சாலை போடுவதற்காக சாலைகள் பெயர்க்கப்பட்டது.
புதிய சாலை போடும் பணிகள் துவங்க காலதாமதம் ஏற்படும் சூழலில், பெயர்ந்த சாலையில் ஜல்லிகள் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் செல்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து செல்லும் பெற்றோரும், மருத்துவமனைக்கு செல்வோரும் மிகுந்த அச்சத்தோடு வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.
பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது டயரில் கற்கள் பட்டு சிதறி சாலையோரம் செல்பவர்கள் மீது விழுந்து காயமடைந்து வரும் சம்பவமும் நடக்கிறது. மேலும் கற்கள் கடைகள் மீதும் விழுவதால் வியாபாரிகளும் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, நெடுஞ்சாலையை துரிதமாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

