/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓமந்துாரில் விளையாட்டு அரங்கம் ரூ.3 கோடியில் பணி துவக்கம்
/
ஓமந்துாரில் விளையாட்டு அரங்கம் ரூ.3 கோடியில் பணி துவக்கம்
ஓமந்துாரில் விளையாட்டு அரங்கம் ரூ.3 கோடியில் பணி துவக்கம்
ஓமந்துாரில் விளையாட்டு அரங்கம் ரூ.3 கோடியில் பணி துவக்கம்
ADDED : டிச 09, 2025 06:05 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஓமந்துாரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திண்டிவனம் அடுத்த ஓமந்துாரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்காக சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை 11:30 மணியளவில் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
இதை தொடர்ந்து ஓமந்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே திட்டபணிக்கான பூமி பூஜை நடந்தது.
ரவிக்குமார் எம்.பி., சப் கலெக்டர் ஆகாஷ், மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், துணை சேர்மன் பழனி, மாவட்ட துணை சேர்மன் ஷீலாதேவி சேரன் உட்பட பலர் பங்கேற்றனர்.