/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தெய்வானை மகளிர் கல்லுாரி; புதுச்சேரி நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம்

ADDED : நவ 24, 2025 06:19 AM

விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி சார்பில், கல்வித் திறன் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரி எச்.டி.ஜி.இ., நிறுவனத்தோடு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை நிர்வாக அதிகாரி அரிகரன், பவதாரணி ஆகியோர் மேலாண்மைக் குழு மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் முன்னிலையில், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி முதல்வர் கலைமதி, வணிக நிர்வாக துறை தலைவர் வாசுகி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இது தற்காலத்தில் உள்ள அறிவு சார்ந்த தரவுகள், தொழில் சார்ந்த பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்கிறது. மாணவர்களுக்கு நிகழ்நேர திட்ட வெளிப்பாடு, தொழில்நுட்ப திறன் மேம்பாடு, நேரடி கற்றல் அனுபவங்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதால் தொழில், கல்வி இணைப்பை வலுப்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் மாணவிகள் தொழில் வல்லுநர்களிடம் இருந்து திறன் வாய்ந்த நுண்ணறிவு பெறுவதோடு, மேம்பட்ட வேலை வாய்ப்பு, முழுமையான தொழில்முறை வளர்ச்சியும், பயிற்சி வாய்ப்புகள், தொழில் சார்ந்த திட்டப்பணி, நேரடி தொழில்நுட்ப வெளிப்பாடு, அதிக வேலைவாய்ப்புகள் வழங்கபட உள்ளது.