/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு; மத்திய அரசிடம் எம்.பி., கோரிக்கை
/
தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு; மத்திய அரசிடம் எம்.பி., கோரிக்கை
தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு; மத்திய அரசிடம் எம்.பி., கோரிக்கை
தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு; மத்திய அரசிடம் எம்.பி., கோரிக்கை
ADDED : டிச 15, 2024 10:57 PM
விழுப்புரம் ; தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க வேண்டுமென ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
வி.சி.க., பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
தமிழக மீனவர்களுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கடந்த ஆண்டு 230 பேர், இந்தாண்டு 530 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வலைகள், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றை ஏலம் விட்டு, இலங்கை அரசு கருவூலத்தில் சேர்த்துக் கொள்கிறது.
பல மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
குஜராத், ஒடிசா மாநில மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டால், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போது, மத்திய அரசு மெத்தனமாக உள்ளது.
'பாட்டம் டிராலிங்' மூலம் இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் பிரச்னைக்கு தீர்வுக்கு ஏற்படுத்த வேண்டும். தினக்கூலிக்கு விசைப்படகுகளில் பணிபுரியும் மீனவர்களுக்கு, மாற்று வாழ்வாதார ஏற்பாடு செய்ய வேண்டும்.
வளைகுடா பகுதியை திறம்பட கண்காணிக்க, கடலோர காவல்படைக்கு போதுமான ஆட்களை நியமிக்க வேண்டும்.
இலங்கை அதிபரின் இந்திய வருகைக்கு முன், அனைத்து தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.