/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சொத்து வரியை செலுத்த பேரூராட்சி கெடு
/
சொத்து வரியை செலுத்த பேரூராட்சி கெடு
ADDED : செப் 27, 2024 05:51 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சியில் சொத்துவரியை செலுத்த கெடு விதிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள்படி, தங்களது சொத்து வரியினை முதல் அரையாண்டு ஏப்ரல் 2024 முதல் செப்டம்பர் 2024 முடிய செலுத்தி 2.5 சதவீத ஊக்கத்தொகை பெறவும். தவறினால் ஒரு சதவீதம் மாதாந்திர வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும்.
இரண்டாம் அரையாண்டு சொத்து வரித் தொகையினை அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை அக்டோபர் மாதத்திலேயே செலுத்தி 2.5 சதவீத ஊக்கத்தொகை பெறவும்.
தவறினால் ஒரு சதவீதம் மாதாந்திர வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும். எனவே பொதுமக்கள் பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு அளித்து, உரிய காலத்தில் வரியை செலுத்தி அபராத தொகையை தவிர்த்திட வேண்டும். இத்தகவலை விக்கிரவாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்தீப் தெரிவித்துள்ளார்.