/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அருங்காட்சியக அலுவலர் விழுப்புரத்தில் ஆய்வு
/
அருங்காட்சியக அலுவலர் விழுப்புரத்தில் ஆய்வு
ADDED : பிப் 16, 2025 02:59 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் கண்டெடுக்கப்பட்ட, பல்லவர் கால சிற்பத்தை, கடலுார் அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா நேரில், ஆய்வு செய்தார்.
விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில், இரண்டரை அடி உயர பலகைக் கல் சிற்பம் மண்ணில் புதைந்துள்ளது.
இந்த முருகன் சிற்பத்தின் காலம் கி.பி., 7 -8ம் நுாற்றாண்டைச் (பல்லவர் காலம்) சேர்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இது பற்றி தகவலறிந்த, தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் கவிதா ராமு உத்தரவின் பேரில், கடலுார் மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா, நேற்று விழுப்புரத்திற்கு வந்து அந்த சிற்பத்தை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது, எழுத்தாளர் செங்குட்டுவன் , சிற்பத்தின் அமைப்பு குறித்து விளக்கினார். இந்த சிற்பத்தை, அரசு அருங்காட்சியகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, காப்பாட்சியர் ஜெயரத்னா தெரிவித்தார்.

