/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
/
முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED : மே 11, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்,: புருஷனுார் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்தது.
விழுப்புரம் அடுத்த புருஷனூர் கிராம முத்துமாரியம்மன் கோவிலில், சித்திரை தேரோட்டம், செடல் உற்சவ விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து 9 நாட்களாக சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதி உலா நடந்து வந்தது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. செடல் அணிந்து பக்தர்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.