/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாய நிலத்தில் மர்ம விலங்கின் கால் தடம் சிறுத்தையாக இருக்கலாம் என மக்களை அச்சம்
/
விவசாய நிலத்தில் மர்ம விலங்கின் கால் தடம் சிறுத்தையாக இருக்கலாம் என மக்களை அச்சம்
விவசாய நிலத்தில் மர்ம விலங்கின் கால் தடம் சிறுத்தையாக இருக்கலாம் என மக்களை அச்சம்
விவசாய நிலத்தில் மர்ம விலங்கின் கால் தடம் சிறுத்தையாக இருக்கலாம் என மக்களை அச்சம்
ADDED : டிச 11, 2025 06:27 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே விவசாய நிலத்தில் மர்ம விலங்கின் கால் தடம் பதிந்துள்ளதால் சிறுத்தையாக இருக்கலாம் என மக்கள் அச்சத்துடன் இருந்துவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி உட்பட பல்வேறு பகுதியில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வரும் தகவல்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.இதனை வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்தும், சி.சி.டி.வி., கேமரா வைத்தும் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு கிராமம் மக்கள் நேற்று முன்தினம் ஆற்றங்கரையோர விவசாய நிலங்களில் கால்நடை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு விசித்திரமான கால் தடயங்கள் நிலத்தில் பதிந்திருந்ததை கண்டு அச்சமடைந்தனர்.
உடன் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்து அது நாய்களின் கால் தடங்கள் எனக்கூறி சென்றனர். இதையெடுத்து நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் மேற்கு பகுதியில் உள்ள அவரது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது நிலத்தில் விசித்திரமான கால் தடயங்கள் கண்டுள்ளார். மீண்டும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் பார்வையிட்டு எந்த விலங்கின் கால் தடம் என கண்டுபிடிக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில்: நாங்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறோம். இதுவரை இது போன்ற கால் தடங்களை நாங்கள் பார்த்தில்லை. இருவேல்பட்டு ஏரியில் மான், மயில், நீர் நாய் போன்ற விலங்குகள் கடந்த சில மாதங்களாக அதிகளவில் உள்ளன. எனவே மான்களை வேட்டையாடுவதற்கு கூட சிறுத்தைகள் வந்திருக்கலாம் என கூறினார்.
இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

