/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாஹர் பள்ளி மாணவி தடகளத்தில் தங்கம்
/
நாஹர் பள்ளி மாணவி தடகளத்தில் தங்கம்
ADDED : நவ 14, 2024 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற, விழுப்புரம் நாஹர் பள்ளி மாணவி கவுரவிக்கப்பட்டார்.
தமிழக அளவில் சென்னை, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த, பள்ளி மாணவர்களுக்கான இரண்டாவது, தமிழ்நாடு தடகள போட்டியில், விழுப்புரம் நாஹர் பள்ளி மாணவி பவதாரணி பங்கேற்று, முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். மாணவி பவதாரணி பிளஸ் 1 படித்து வருகிறார்.
தங்கப்பதக்கம் பெற்று வந்த பவதாரணியை, பள்ளி தாளாளர் உமா மகேஸ்வரி, பள்ளி முதல்வர் அரசப்பன் ஆகியோர் பாராட்டினர்.