/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுச்சாவடிகளில் பெயர் சேர்க்கை முகாம்
/
ஓட்டுச்சாவடிகளில் பெயர் சேர்க்கை முகாம்
ADDED : நவ 14, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: தமிழகம் முழுவதும் வரும் ஜன. 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு புதிய வாக்காளர்களை சேர்ப்பதர்கான சிறப்பு முகாம் வரும் 16, 17 ம் தேதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்க உள்ளது.
செஞ்சி தொகுதியில் நடக்க உள்ள முகாம்களில் பங்கேற்க உள்ள ஓட்டுசாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் செஞ்சி வட்டார வளமையத்தில் நடந்தது. தாசில்தார் ஏழுமலை தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் துரைச்செல்வன், ஆதிதிராவிடர் மற்றும் நலத்துறை தனி தாசில்தார் புஷ்பவதி முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு உதவியாளர் சரவணன் வரவேற்றார். இதில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பங்கேற்றனர்.

