தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தேசிய நுாலக வார விழா

தேசிய நுாலக வார விழா

தேசிய நுாலக வார விழா


UPDATED : நவ 20, 2026 10:18 PM

ADDED : நவ 20, 2026 10:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 10:18 PM ADDED : நவ 20, 2026 10:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவெண்ணெய்நல்லூர்: தமிழக அரசு பொது நுாலகத்துறை, விழுப்புரம் மாவட்டம் நுாலக ஆணைக்குழு, திருவெண்ணெய் நல்லுார் கிளை நுாலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து, 59வது தேசிய நுாலக வார விழா நடத்தியது. திருவெண்ணெய்நல்லுார் கிளை நுாலகத்தில் நடந்த விழாவிற்கு, கிளை நுாலகர் சசிகுமார் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., நகர செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.

த.வெ.க., நகர செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். விழாவில் திருக்கோவிலுார் எம்.எல்.ஏ., பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரிப்பன் வெட்டி விழாவை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், புதிய உறுப்பினர்கள் மற்றும் புரவலர்கள் சேர்க்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாசகர்கள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us