/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் தேசிய கணித தினம்
/
மகளிர் கல்லுாரியில் தேசிய கணித தினம்
ADDED : ஜன 04, 2025 05:23 AM

விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் கணித ஆராய்ச்சி துறை சார்பில் தேசிய கணித தினம் நிகழ்ச்சி நடந்தது.
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் தொடர்பியல் கவுன்சில், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி இணைந்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் அகிலா தலைமை தாங்கி, தேசிய கணித தினம் கொண்டாடுவதன் முக்கியத்துவம் பற்றி கூறினார்.
தொடர்ந்து, கணிதா அவதானி, ஜானகிராமன் ஆகியோர் கணித புதிர்களை தீர்ப்பது பற்றியும், தர்க்கரீதியான பகுத்தறிவை கணிதம் எவ்வாறு வடிவமைக்கிறது பற்றி சிறப்புரையாற்றினர்.
மேலும், ஆர்வமின்மை, பயம், கவனச்சிதறல் மற்றும் கணிதம் கற்றலை பாதிக்கும் காரணிகளை விவாதிப்பதன் மூலம் பள்ளி, கல்லுாரி மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.
இதில், துணை முதல்வர், துறை தலைவர் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் சிறிப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு, பரிசு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், பல கல்லுாரிகளை சேர்ந்த 456 மாணவ, மாணவிகள் பங்கேற்றதில், 33 பேர் பரிசு பெற்றனர்.
துணை முதல்வர் செல்வி நன்றி கூறினார்.

