/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் ரூ.23 கோடிக்கு சமரச தீர்வு
/
தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் ரூ.23 கோடிக்கு சமரச தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் ரூ.23 கோடிக்கு சமரச தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் ரூ.23 கோடிக்கு சமரச தீர்வு
ADDED : டிச 15, 2024 07:15 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்களில், 3,553 வழக்குகளில் 23 கோடி ரூபாய்க்கு சமரச தீர்வு காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி முன்னிலை வகித்தார். மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினரான சென்னை ஐகோர்ட் நீதிபதி ராஜசேகர் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 6 அமர்வுகள் மற்றும் கள்ளக்குறிச்சி, செஞ்சி, திண்டிவனம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், வானுார், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார் ஆகிய நீதிமன்றங்களில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழுவின் மூலம் 25 அமர்வுகள் நடைபெற்றது. இதில், 3,553 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 23 கோடியே ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 819 ரூபாய்க்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டது.
நீதிபதிகள் இளவரசன், ராஜசிம்மவர்மன், வினோதா, வெங்கடேசன் , பாக்யா ஜோதி, தமிழ்ச்செல்வன், ரஹ்மான், புஷ்பராணி, வரலட்சுமி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.