
விழுப்புரம், : விழுப்புரம் அருகே அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், ஒரு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் உதவியோடு நடந்த கருத்தரங்கிற்கு, கல்லுாரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார்.
முதல்வர் அன்பழகன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை ஒருங்கிணைப்பாளர் ஜோதிகல்பனா, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பெருமாள் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் பெருமாள் வரவேற்றார்.
பேராசிரியர் தத்தா மிஷ்ரா, சவிதா பல்லைக்கழகம், இயந்திரவியல் துறை, பேராசிரியர் செந்தில்குமார் ஆகியோர் தங்களின் கருத்துகளை கூறினர்.
கருத்தரங்கில், கண்டுபிடிப்பு, மறு வடிவமைப்பில் உள்ள அவசியமான சிந்தனைகள், அதில் உள்ள முக்கிய முடிவுகள், பொறியியலில் உள்ள சிக்கலுக்கு உகந்த சிறப்பு தீர்வுகள், இதற்கு உதவியான மென்பொருள்கள் பற்றியும், இதை கையாளும் பயிற்சி பற்றி கூறப்பட்டது. உதவி பேராசிரியர் மதன்ராம் நன்றி கூறினார்.