/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்
/
அரசு கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்
ADDED : அக் 19, 2025 11:56 PM

திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லுாரியில், வணிக நிர்வாகவியல் துறை சார்பில் சிறு தொழில்களில் உள்ள நிதி பிரச்னைகள் மற்றும் வளர்ச்சி உத்திகள் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் நாராயணன் தலைமை தாங்கினார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் கோபிநாத் வரவேற்றார். திருவாரூர் மத்திய பல்கலை பொருளாதார துறை பேராசிரியர் தாமோதரன் சிறப்புரையாற்றினார்.
வேப்பூர் அரசு கலைக்கல்லுாரி வணிக நிர்வாகவியல் துறை இணை பேராசிரியர் ஜான் அடைக்கலம், சிறு தொழில் பிரச்னைகள் குறித்து விளக்கினார். சென்னை நியோ சயின்ஸ் தலைமை நிர்வாகி ரமேஷ், சந்தையில் உள்ள வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
ஆராய்ச்சி மாணவர்களின் கட்டுரை தொகுப்பு வெளியிடப்பட்டது. பல்வேறு கல்லுாரிகளை மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை பேராசிரியர்கள் செந்தில்குமார், பாலகுருபரன், சீராளன், அன்பரசி ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் தியாகராஜன் நன்றி கூறினார்.