/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் புதிய விருந்தினர் விடுதி சிவக்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

ADDED : அக் 19, 2025 11:57 PM

விழுப்புரம்: 'செஞ்சி நகரில் பொதுப்பணித்துறை விருந்தினர் விடுதி அமைக்கப்படும்' என அமைச்சர் வேலு தெரிவித்தார்.
சட்டசபை கூட்டத்தில், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் பேசுகையில், 'விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த உள்ள திருவண்ணாமலை மற்றும் மேல்மலையனுார் ஆகிய ஆன்மிக தலங்களுக்கு, முக்கிய பிரமுகர்கள் பலரும் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.
அமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்களும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வழியாக வந்து செல்கின்றனர்.
எனவே, செஞ்சி நகரில் பொதுப்பணித்துறை சார்பில், அரசு விருந்தினர் விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, 'செஞ்சியில் ஏற்கனவே நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகை உள்ளது. ேமலும், மஸ்தான் எம்.எல்.ஏ., விருந்தினர் விடுதி அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பொதுப்பணித்துறை சார்பில் பயணியர் விடுதி அமைப்பதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க அலுவலர்களிடம் வலியுறுத்தப் பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு தயாரானதும், செஞ்சியில் பயணியர் விடுதி அடுத்த நிதியாண்டு அமைக்கப்படும்' என்றார்.