/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிளியனுார் ரங்கபூபதி செவிலியர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்
/
கிளியனுார் ரங்கபூபதி செவிலியர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்
கிளியனுார் ரங்கபூபதி செவிலியர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்
கிளியனுார் ரங்கபூபதி செவிலியர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்
ADDED : ஜூன் 17, 2025 11:47 PM

செஞ்சி: கிளியனுார் ரங்கபூபதி செவிலியர் கல்லூரியில் தேசிய அளவிலான பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
திண்டிவனம் அடுத்த கிளியனுார் ரங்கபூபதி கல்லுாரியில், 'முதல் உதவி மேலாண்மை, மேம்படுத்தப்பட்ட நுட்பங்கள்' எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி தாளாளர் ரங்க பூபதி தலைமை தாங்கினார். துணை செயலாளர் சாந்தி பூபதி குத்து விளக்கேற்றினார்.
விபத்து, பாம்பு கடி, விஷம் அருந்தியவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை குறித்து விவேகானந்தா கல்லுாரி முதல்வர் டாக்டர் பரணி, துணை முதல்வர் டாக்டர் பூவராகவன், செவிலியர் கல்லூரி விக்னேஷ், பேராசிரியர்கள் அருணா, மாலதி, ரங்கபதி கல்லுாரி முதல்வர் மேனகா காந்தி ஆகியோர் விளக்கி பேசினார்.
இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி டாக்டர் கணேஷ், பேராசிரியர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சுவாச பாதிப்பு மற்றும் அழுத்தத்திற்கான முதலுதவி செய்முறை பயிற்சியளித்தனர். இதில் பேராசிரியர்கள் தனலட்சுமி, கலைமதி, வனிதா, சுகந்தி மற்றும் பி.எஸ்.சி., நர்சிங், டிப்ளமோ நர்சிங், ஏ.என்.எம்., மாணவர்கள் கலந்து கொண்டனர்.