ADDED : மார் 21, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அருகே உள்ள கருவம்பாக்கத்தில் தரம்சந்த் ஜெயின் பள்ளியில் தேசிய மாணவர் படை அமைப்பு துவக்க நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினர் இந்திய ராணுவ நிர்வாக அதிகாரி கர்னல் சக்கரபர்த்தி பேசினார். தரம் கல்விக் குழும தாளாளர் பப்ளாசா, செயலாளர் ஜின்ராஜ், பொருளாளர் நவீன் குமார், நிர்வாக இயக்குனர் அனுராக் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சாந்தி பாலசந்தர் வரவேற்றார்.
மாணவர் படைக்கு தேசிய மாணவர் படையின் பெண்கள் பிரிவு பயிற்றுநர் சிதம்பரத்தைச் சேர்ந்த தேவசேனா பயிற்சி அளிக்க உள்ளார்.