ADDED : நவ 01, 2025 03:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: ஆரோவில் அறக்கட்டளை சார்பில், சர்தார் வல்லபாய் படேல் நினைவை போற்றும் வகையில், தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்பட்டது.
விழாவில், ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு அலுவலர் சீதாராமன், ஓ.எஸ்.டி., அலுவலர் வேணுகோபால் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நாட்டின் பாதுகாப்பை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வு, நம் நாட்டை ஒன்றிணைக்கும் நிலையான மதிப்புகளை நினைவூட்டுவதாகவும், அனைத்து சமூகங்களிலும் ஒருமைப்பாடு மற்றும் நேர்மையை ஊக்குவிப்பதில் தீவிர பங்கேற்பை ஊக்குவிப்பதாகவும் அமைந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

